ஆகஸ்ட் 24 அன்று, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ டி.ராஜா சிங்குக்கு எதிரான பேரணியில் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவக்களைக் கொலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியதற்காக கலீம் உதீன் என்ற இஸ்லாமியரை தெலுங்கானா காவல்துறை கைது செய்தது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 153, 295(ஏ), மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நல்கொண்டா காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ரெமா ராஜேஸ்வரி தெரிவித்தார்.
முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக டி ராஜா சிங்கிற்கு எதிராக இஸ்லாமியர்கள் குழு ஒன்று எதிர்ப்பு பேரணி நடத்தியது. கலீம் உதினின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் “காட் டாலோ சாலோன் கோ” என்ற கோஷத்தை எழுப்புவதைக் காண முடிந்தது, அதற்கு கூட்டம் “ஆர்எஸ்எஸ் வாலோன் கோ”என்று கூறியது (இந்த கோஷம் “ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை துண்டு துண்டாக வெட்டுவது” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுhttps://twitter.com/i/status/1562450779658629127
வீடியோவில் கேட்கப்பட்ட எதிர்ப்புப் பேரணியின் போது எழுப்பப்பட்ட மற்றொரு முழக்கம் “போலோ போலோ க்யா சாஹியே, குஸ்தாக்-இ-நபி கா சர் சாஹியே” (இது “நமக்கு என்ன வேண்டும்? நிந்தனை செய்பவரின் தலை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).