ஆகஸ்ட் 29, புதுடில்லி : ராணுவத் துறையில் உள்நாட்டு தயாரிப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இதன்படி, குறிப்பிட்ட சில ஆயுதங்கள், தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு, 2021 டிச., மற்றும் கடந்தாண்டு மார்ச்சில் இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டன.தற்போது மூன்றாவது பட்டியலை, பா.ஜ., மூத்த தலைவரான ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.‘அடுத்த ஆறு ஆண்டுகளில் படிப்படியாக, 780 ராணுவ ஆயுதங்களுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும். ‘இந்த உதிரி பாகங்கள் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படும்‘ என, ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:ராணுவ ஆயுதங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கு அமெரிக்கா, ரஷ்யா போன்ற வெளிநாடுகளைச் சார்ந்திராமல், உள்நாட்டிலேயே அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.