பக்தி வேதாந்த சுவாமிபிரபுபாதா

0
202

1. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா செப்டம்பர் 1, 1896 ஆண்டு இந்தியாவின் கல்கத்தா நகரில் பிறந்தவர். இயற் பெயர் அபய் சரண்.

2. இவரது குரு ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி இவரிடம் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபுவின் போதனைகளை உலகமெங்கும் ஆங்கிலத்திலே பிரசங்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பின்னாளில் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை நிறுவினார்

3. இந்நிறுவனத்திற்கு உலகெங்கிலும் ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள் மற்றும் வைதீகப் பண்ணைகள் உள்ளன.

4. வேத ஞானத்தை பிரச்சாரம் செய்வதற்காய் தமது வாழ்வை அர்பணம் செய்து கொண்டவர் பிரபு பாதா

5. பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் பிரபு பாதாவின் இந்திய மத, தத்துவ ஞான நூற்களை மட்டும் வெளியிடும் உலகின் மிகப்பெரிய நூல் வெளியீட்டு நிறுவனம்.

6. பிரபு பாதா ஆறு கண்டங்களிலும் பதினான்கு முறைகளுக்கு மேல் பயணம் செய்து கிருஷ்ண பக்தி பற்றி உரையாற்றியுள்ளார்.

7. சீரழிந்து சென்ற அமெரிக்க இளைஞர்களை நன்னெறிப் படுத்தியது ISKON.

8. உலகத்தினர் இந்து மத தத்துவங்களை நாடி வருவதற்கு மிகப் பெரும் காரணம் பிரபுபாத சுவாமிகள்.

9. இவரது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் காரணமாக கிறிஸ்தவர்கள் ஹிந்து மதத்தை பின்பற்றத் துவங்கியதால் பல நாடுகள் ISKON அமைப்பை தடை செய்தனர். அவற்றை எல்லாம் கடந்து இன்று உலகின் மிகப்பெரும் பக்தி இயக்கமாக திகழ்கிறது இஸ்கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here