செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த நாள்

0
229

செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த நாள் (01.09.1895)

1. செம்பை வைத்தியநாத பாகவதர் பிரபலமான பாரம்பரிய கர்நாடக இசைக்கலைஞர்.

2. மிக கம்பீரமாக பாடும் ஆற்றலை பெற்ற பாகவதரின் குரல்வளம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருந்தது. இவருக்கு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருந்துள்ளனர்.

3. 3 ஆம் வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு 8 வது வயதில் தமது அரங்கேற்ற கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார்.

4. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார்.

5. “ரக்ஷ மாம்”, “வாதாபி கணபதிம்”, “பாவன குரு” போன்ற பாடல்களை பலமுறை தன் கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார். ஜய-விஜயன், யேசுதாஸ், டி. வி. கோபாலகிருஷ்ணன், பி. லீலா, வி.வி.சுப்பிரமணியம், போன்றோர் இவரின் சீடர்கள்.

6. 15 நாட்கள் குருவாயூரில் நடக்கும் செம்பை சங்கீத உற்சவம், நடக்கும் இவ்விழாவில், 3,000க்கும் மேல் பாடகர்கள் பங்கேற்கின்றனர். இது, அவரது காலத்தில் வாழ்ந்த யாருக்கும் கிடைக்காத அங்கீகாரம்.

7. பாரத பாரம்பரியக் இசைக்கலையின் முன்னோடியான செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்ததினம் இன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here