1. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், 1903 செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார்.
2. தமிழறிஞர், தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்.
3. தமிழை முறையாகப் பயில வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டார்.
4. கரந்தைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில், தமிழ்வேள் உமாமகேசுவரனால் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார்.
5. ஆசிரியப்பணி புரிந்து கொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று 1930 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக “வித்துவான்” தேர்வில் வெற்றி பெற்றார்.
6. தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் முதலிய இதழ்களில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.
7. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது, சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் போன்ற அரிய நூல்களை எழுதினார். அந்நூல்கள் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளாக வெளியிடப்பட்டன.