உடல் உறுப்பு தானம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்

0
177

‘ஆரோக்கியமான வலுவான இந்தியா’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் தொடங்கி வைத்தார். பாரதத்தில் உடல் உறுப்பு, கண் தானத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில் உரையாற்றிய மாண்டவியா, “நமது சொந்த நலன் மட்டுமல்ல, பொதுநலன் குறித்து சிந்திப்பதே நமது பாரம்பரியம். உறுப்பு தானம் அத்தகைய பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மனித நேயத்திற்காக தங்கள் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வருவதை ஊக்குவிக்க, மக்கள் இயக்கமாக அதனை மாற்றவேண்டும். உறுப்பு தானம் செய்ய மக்களை ஊக்குவிக்க அரசாலோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலோ மட்டும் சாத்தியமில்லை. அந்த இயக்கம் வெற்றிபெற வேண்டுமென்றால் அது மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். உடல் உறுப்பு தான இயக்கத்தின் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முழு மனதுடன் உறுதி பூண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here