1. பொ. வே. சோமசுந்தரனார் 1909 செப்டம்பர் 5 ஆம் நாள் திருவாரூர் மாவட்டம் மேலப்பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்தார்.
2. சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விபுலாநந்த அடிகள், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார். அதனால் ஆழ்ந்த தமிழ்ப்புலமை பெற்றார்.
3. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, மணி மேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பெருங்கதை உள்ளிட்ட ஏராளமான நூல்களுக்கு உரை எழுதினார்.
4. மேலும், நாடக நூல்கள், உரைநடை நூல்கள் மற்றும் பல நாடகங்களையும் எழுதியுள்ளார். இவை பின்னாளில் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டன.