பயங்கரவாத மதரசா ஆசிரியர் கைது

0
194

பாகிஸ்தானைச் சேர்ந்த கே.ஜே.எப்., எனப்படும் காஷ்மீர் ஜான்பான்ஸ் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரின் பாதுகாப்பு கட்டமைப்புகள் தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் ரகசியமாக அளித்து வந்தார் ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த குவரி அப்துல் வாஹித் என்ற மதரசா ஆசிரியர். இது தொடர்பாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவ உளவு அமைப்புகள் உள்ளிட்டவை இணைந்து விசாரித்து வந்தன. விசாரணையில் அவர் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் உறுதியானதையடுத்து சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here