அமெரிக்க அருங்காட்சியகத்தில் தமிழகத்தின் 3 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

0
207

கும்பகோணம் அருகே சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, மூன்று சிலைகள், அமெரிக்காவில், அருங்காட்சியகங்களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள்கோவில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த காளிங்கனார்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய 3 பழங்கால சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் 3 சிலைகளையும் கடத்தி அதற்கு பதில் போலி சிலையை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி இந்தோ-பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் பெறப்பட்ட புகைப்படத்துடன் தற்போதுள்ள போலி மாடலை ஒப்பிட்டு பார்த்ததில் தற்போதுள்ள 3 சிலைகளும் போலி என்பதும், உண்மையான சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதும் நிரூபணமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here