கர்த்தவ்ய பத் இல் நேதாஜி சிலை

0
152

1947 இல் நாடு விடுதலை பெற்ற போது 5 ஆம் ஜார்ஜ் மன்னர் சிலை இருந்தது. அப்போது அதன் பெயர் Kingsway. அதை ராஜ்பத் என்று மொழிமாற்றம் மட்டும் செய்து அழைத்து வந்தனர். 1970 இல் 5ஆம் ஜார்ஜ் மன்னர் சிலை அகற்றப்பட்டு அது ஒரு திரையைக் கொண்டு சுருட்டி வைக்கப் பட்டுள்ளது.
5 ஆம் ஜார்ஜ் இருந்த இடத்தில் வீரத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது. இனிமேல் கர்த்தவ்ய பத் என்று அழைக்கப்படும்.
இந்தியா கேட் Central Vista Lawns திறப்பு விழாவில் பிரதமர் மோதி நாளை இதை திறந்து வைக்கவுள்ளார்.அடிமைவாழ்வு ஒழிந்து அன்னியன் அகன்ற பின்னும் அடிமை மோகம் அகலவில்லை. Delli Challo என வீர சுதந்திரப் போரை முன்னெடுத்து வந்த நேதாஜியின் திருஉருவச் சிலை அவ்விடத்தில் இருப்பது மிகவும் பொருத்தமாகும்.இதே போன்று தில்லியில் அந்நிய மொகலாய ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களைத் தாங்கி இருக்கும் பல சாலைகளின் பெயர்களையும் மாற்ற வேண்டும்.

                                                                                         – Sadagopan Narayanan

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here