வத்திராயிருப்பு கோவில் தெப்பத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு

0
280

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மாவூற்று உதயகிரிநாதர் கோவில் தெப்பக்குளம் புனரமைப்பின்போது, 1 அடி உயர, பொன்னிறத்தில் இருந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.இந்த தெப்பக்குளம், அரசு சார்பில் புனரமைக்கப்படுகிறது. தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.நேற்று அந்த பணி நடைபெற்ற போது 1 அடி உயரத்தில் பொன்னிறத்தில் ஒரு பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு அந்த சிலை கொண்டு செல்லப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here