கல்கி கிருஷ்ணமூர்த்தி

0
227

1. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார்.

2. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

3. இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.

4. 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

5. 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் வெளியானது.

6. தமிழன்னைக்கு தமது நாவல்கள், சிறுகதைகள் என பலவற்றை அணிகலனாக அளித்தவர்.

7. எழுத்தாளர், பத்திரிகையாளர், நகைச்சுவையாளர், பயணக் கட்டுரை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், கவிஞர், கலை விமர்சகர் என பன்முகத் தன்மை பெற்றவர்.

8. இவரது நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here