17 ரயில்வே ஊழியர்கள் தேசத்தை காக்க பலிதானமாயினர்.
பாரத பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்ற போது 17 ரயில்வே ஊழியர்கள் வீர தீர சாகசங்கள் புரிந்து தேசத்தை காக்க தங்கள் உயிரை அர்ப்பணித்தனர். அந்த வீர பலிதானிகளுக்கு சிரத்தாஞ்சலி செய்யும் பொருட்டு கட்ரா ரோட்டில் நினைவிடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
1965 பாரத பாகிஸ்தான் யுத்த காலத்தில் ரயில்வே தண்டபாளங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 17 இளைஞர்கள் பலிதானமாயினர். அவர்கள் ரயில் மூலமாக நமக்கு வேண்டிய ஆயுதங்களும் உணவு பொருட்களையும் கொண்டு சேர்ப்பதற்காக வந்து கொண்டிருந்தனர்.ராணுவ கவச வாகனங்களின் பேரிரைச்சல் போர் விமானங்களில் இருந்து பொழியும் குண்டு மழைகள், நான்கு பக்கங்களிலும் இருந்து துப்பாக்கியில் இருந்து வரும் குண்டுகள் ரயில் தண்டவாளங்களில் ராணுவம் வரும் காட்சிகள் ஆகியவை மெய்சிலிர்க்க வைத்து நினைவில் நின்றன.