துபையில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தா்பா் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது.
அதிகாரபூா்வமாக தசரா தினமான அக்டோபா் 5-ஆம் தேதிதான் திறக்கப்பட உள்ளது என்றபோதும், சிறப்பு பூஜைகள் பணிகளுக்காக செப்டம்பா் 1-ஆம் தேதியை திறக்கப்பட்டுவிட்டது.கோயில் திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே ஏராளமான பக்தா்கள் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.