புதுடில்லி :டி.ஆர்.டி.ஓ.,ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மிக குறுகிய துார தடுப்பு ஏவுகணைகளை தயாரித்துள்ளது. வான்வழியில் வரும் ஏவுகணை தாக்குதல்களை தடுத்து தாக்குதலை முறியடிப்பதற்காக இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த ஏவுகணைகள், ஒடிசாவின் சண்டிப்பூர் கடல் பகுதியில் வெற்றிகரமாக ஏவி இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டது.இந்த ஏவுகணையில் வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் இந்த சோதனையின்போது உறுதி செய்யப்பட்டன. இந்த ஏவுகணையும், அதை செலுத்தும், ‘லாஞ்சர்’களும் மிக எளிதாக எடுத்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Home Breaking News டி.ஆர்.டி.ஓ.,ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மிக குறுகிய துார தடுப்பு ஏவுகணை சோதனை வெற்றி