போராட்டத்தால் ரூ.5 கோடி சேதம் பி.எப்.ஐ.,யிடம் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0
443

கேரளாவில் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால், மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்ட இழப்பீடு 5 கோடி ரூபாயை செலுத்தும்படி, தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:தற்போது இந்த அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. திடீர் போராட்டம் மற்றும் வன்முறையால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்ட, 5.06 கோடி ரூபாய் இழப்பை செலுத்தும்படி இந்த அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது.இந்த இழப்பீட்டை செலுத்தும் வரையில், போராட்டம் மற்றும் வன்முறையின்போது கைது செய்யப்பட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த எவருக்கும் ஜாமின் வழங்கப்படாது. மேலும் இந்த அமைப்பின் முன்னாள் பொதுச் செயலர் அப்துல் சத்தார் இதற்கு பொறுப்பாக்கப்படுகிறார். இந்த அமைப்பின் மீதான அனைத்து வழக்குகளிலும் அவரே ஒரு வாதியாக இருப்பார்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here