நவராத்திரி கர்பா பந்தல்களுக்குள் முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டும், தங்களை இந்துவாகக் காட்டிக் கொண்டும் நுழையும் பல வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அகமதாபாத் மற்றும் இந்தூரில் உள்ள உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இந்து சிறுமிகளை படம்பிடித்து புகைப்படம் எடுத்ததால் அவர்களை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
புதன்கிழமை, இந்தூரில் உள்ள பண்டரிநாத்தின் கர்பா பந்தலில் இருந்து 7 முஸ்லிம் இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இந்து பெண்களை வீடியோ எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அகமதாபாத்தில் உள்ள சிந்து பவன் பகுதியில் உள்ள கர்பா பந்தலுக்குள் நுழைந்த முஸ்லீம் இளைஞர்களை விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.