1. சுவாமி அகண்டானந்தர் 1864 செப்டம்பர் 30 ல் பிறந்தார். இவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவி.
2. இவரது இயற்பெயர் கங்காதர் கங்கோபாத்யாயர். திபெத் மொழியை பதினைந்து நாட்களில் கற்றுக் கொண்டவர்.
3. வங்காளத்தில் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிலவிய கடும் பஞ்சத்தை கண்ட சுவாமி அகண்டானந்தர் தம்மால் பெரிய எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என ஏங்கினார். 1897 மே 1 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷனை ஆரம்பித்தபோது பஞ்ச நிவாரணப் பணியை மேற்கொள்ளும் தீர்மானமும் எடுக்கப்பட்டது.
4. இதுதான் ராமகிருஷ்ண மிஷனின் முதல் நிவாரணப் பணி. இப்பணிக்காக சுவாமி அகண்டானந்தர் கல்கத்தா, சென்னை நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றார்.
5. பஞ்சம் பாதிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகளும் இவருடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முன்வந்தனர்.
6. 1898 ஜூன் 15 இல் சுவாமி விவேகானந்தரும் பாராட்டி கடிதம் எழுதி ஊக்குவித்தார்.
7. RSS ன் இரண்டாவது தலைவர் ஸ்ரீ குருஜி கோல்வல்கர் அவர்களை துறவி ஆகத் தேவையில்லை, அதற்கு பதிலாக தேச சேவை ஆற்றிட RSS பணியை தொடரச் சொன்னவர்.