அக்டோபர் 2 என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியி ஜி பிறந்த நாள் தான்.
அதே தேதியில் பிறந்த மற்றொரு சுதந்திர போராட்ட வீரர் லால்பகதூர் சாஸ்திரி. சாஸ்திரி என்பது ஜாதிப் பெயர் இல்லை. அவர் வாங்கிய பட்டம்.
தனது திருமணத்திற்கு வரதட்சணையாக வாங்கியது கதர் துணியும், ராட்டையும் மட்டுமே.
தன் வாழ்நாளில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் இருந்தபோது உடல் நலமில்லாத தனது மகளைப் பார்க்க 20 நாள் பரோலில் வந்தார். விடுப்புக் காலம் முடியுமுன்னர் மகள் இறந்து விடவே. காரியங்களை முடித்து மறுநாளே சிறைக்குத் திரும்பினார்.
சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபோது அரியலூர் ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
நேரு காலமானபிறகு சாஸ்திரி பிரதமரானார்.
1965ம் ஆண்டு பாகிஸ்தானின் காஷ்மீர் ஆக்கிரமிப்பை எதிர்த்து அந்நாட்டின் மீது போர் தொடுத்தார். அப்போது நாடு முழுவதும் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்!” என்ற கோஷம் எதிரொலித்தது.
உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வாரத்திற்கு ஒருநாள் ஒரு நேர உணவை விலக்க நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
பிரதமராக பதவி வகித்தபோதும் அவருக்குச் சொந்தமாக ஒரு வீடோ; காரோ கிடையாது.