அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை

0
210

புதுடில்லி: உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக லலித் பதவி வகித்து வருகிறார். இவர் வரும் நவ., 8ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு, தலைமை நீதிபதி லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.
ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதன்படி, அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை இன்று தலைமை நீதிபதி லலித் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here