புதுடில்லி :மத்திய நிதியமைச்சகத்தின் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நேற்று துவங்கியது.
நடப்பு நிதியாண்டுக்கான செலவினங்களின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள், மற்றும் 2023 _- 24ம் நிதியாண்டுக்கான நிதித் தேவைகள் ஆகியவை குறித்து முடிவு செய்வதற்காக, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நேற்று துவங்கியது.
நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் பிரிவின் அறிவிப்பின்படி, கூட்டம் நவம்பர் 10ம் தேதி வரை தொடரும். ஜனவரி 11ம் தேதிக்குள் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை அமைச்சகம் இறுதி செய்யும்.