1. கிருஷ்ண குமார் பிர்லா (கே.கே.பிர்லா) அக்டோபர் 12, 1918 ல் பிறந்தார்.
2. இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவர்.
3. இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் மற்றும் பல்வேறு பிர்லா குழும நிறுவனங்களின் தலைவர்.
4. பிர்லா குழுமத்திற்கு நாடு முழுவதும் சர்க்கரை ஆலை, உர தொழிற்சாலை, இரசாயன, கனரக தொழிற்சாலை, புடவை, கப்பல்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் உள்ளன.
5. 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக ராஜ்ய சபை உறுப்பினராக பதவி வகித்த பிர்லா, 1997 ம் ஆண்டு கல்கத்தா ஷெரீப் ஆகவும் பதவி வகித்தவர்.
6. 1997 இல் இவருக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.