கோவில் கட்டும் பணியை பாகிஸ்தான் அரசு நிறுத்தியதை கண்டித்து வால்மீகி சமூகத்தினர் போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லார்கானாவின் காஸ்பிதி பகுதியில் அமைந்துள்ள 80 ஆண்டுகள் பழமையான வால்மீகி கோயில் கட்டப்படுவதை பாகிஸ்தான் அரசு தடுத்து நிறுத்தியது. இதற்கு வால்மீகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசின் பாகுபாடு மற்றும் அடக்குமுறைக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அரசு தங்கள் சமூகத்தின் மீது காட்டும் அக்கறையின்மை, பாகுபாடுகளால் பாகிஸ்தானில் தற்போது 100க்கும் குறைவான வால்மீகி குடும்பங்களே எஞ்சியுள்ளன. அரசின் அடக்குமுறையால் அக்டோபர் மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ள தங்களது திருவிழாவைக் கொண்டாட முடியாத சூழல் உள்ளது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.