ஆமபாதாத்: குஜராத்தில் நடக்கும் பாதுகாப்பு தளவாட கண்காட்சி இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும், இந்தியாவில் தயாரான தளவாடங்கள் இடம்பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் பாதுகாப்புத்துறை சார்ந்த கண்காட்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு விமான படை தளத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் உரையாற்றியதாவது: ‘அம்ரீத் கால்’ (இந்தியா 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் இருந்து 100வது ஆண்டிற்கு செல்வதற்கான நல்ல காலம்) கட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, புதிய இந்தியாவை பெரிய அளவில் இந்த பாதுகாப்பு கண்காட்சி எடுத்து காட்டுகிறது.
இதில், நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களின் பங்களிப்பு, இளைஞர்களின் சக்தி, அவர்களின் கனவு,, தைரியம் மற்றும் திறமை அடங்கியிருக்கும்.
முன்பும் பாதுகாப்பு கண்காட்சி நடந்துள்ளது. ஆனால், தற்போதைய கண்காட்சியானது கணிக்க முடியாத வகையில் அமைந்துள்ளது. இது புதிய இந்தியாவின் துவக்கமாக அமைந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்ற கண்காட்சியாகவும், அதில், இந்தியாவில் மட்டும் தயாரான தளவாடங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன
வெளிநாடுகளில் இருந்து 101 பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து அந்த பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடும். அதனுடன் 411 பாதுகாப்பு சார்ந்த பொருட்கள் இந்தியாவிலேயே கொள்முதல் செய்யப்படும். நாடு வெகுதூரம் சென்றுவிட்டது. முன்பு புறாக்களை விடுவித்த நாம், தற்போது சிறுத்தைகளை விடுவிக்கிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.