சர்வதேச அளவில் பாரதத்தின் தாக்கம்

0
370

பாரதம் வந்துள்ள ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தாக்குதல் நடந்த தாஜ் ஓட்டலுக்கு சென்றும் மரியாதை செய்தார். பிறகு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “166 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத செயல்களில் ஒன்று நடந்த இடத்தில் ஆழ்ந்த உணர்வுடன் உள்ளேன். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் தான் இந்த உலகின் கதாநாயகர்கள். அவர்களின் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். உலகின் அனைத்து நாடுகளுக்கும், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஐ.நாவின் முக்கிய நோக்கமும் அதுதான். பயங்கரவாதத்தை எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்க முடியாது. நியாயப்படுத்த முடியாது” என்றார். பின்னர், மும்பை ஐ.ஐ.டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “பாரதத்தின் 75வது சுதந்திர தினத்தை உங்களுடன் இணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 75 ஆண்டு கால பாரதத்தின் சாதனைக்கும், பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது உலகின் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக பாரதம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கினர் வசிக்கும் நாடாகவும், உலகின் அதிக அளவு இளைஞர்கள் கொண்ட நாடாகவும் உள்ள பாரதம், 2030ல் ஆக்கபூர்வமான வளர்ச்சி இலக்குகளை கொண்டிருக்கும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாரதம் வழங்கிய மருந்துகள், உபகரணங்கள், தடுப்பூசிகள், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய மனிதநேய உதவிகள், நிதியுதவிகள் மூலம், சர்வதேச அளவில் உங்களின் தாக்கத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறீர்கள். இன்று ஐ.நா.,வின் முக்கிய பங்காளியாக பாரதம் உள்ளது” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here