வேகமாக வளரும் பாரதம்

0
195

ஐ.நா அமைப்பின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலக நாடுகள் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், உக்ரைன் போரால் அவற்றின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி, மறுமதிப்பீட்டின்படி 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் பணவீக்கம், கடந்த 10 ஆண்டு சராசரியை விட, இரு மடங்கு உயர்ந்து 6.7 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. தெற்காசிய பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை இவ்வாண்டு அதன் மதிப்பீடும் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு 5.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்பிராந்தியத்தில் பாரதப் பொருளாதாரம் 2021ல், 8.8 சதவீதம் வளர்ச்சி கண்டது. இவ்வாண்டில் பணவீக்க உயர்வு மற்றும் தொழில் துறை முழுமையாக மீட்சி அடையாத காரணத்தால் பாரதப் பொருளாதார வளர்ச்சி 0.3 சதவீதம் குறைந்து 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பாரதம் உலக அளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி நாடாக விளங்குகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here