சேவை என்பது முழுமையை அடைவதற்கான பெயர், இதுவே தர்மம் – டாக்டர் மோகன் பகவத்

0
145

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பகவத் ஞாயிற்றுக்கிழமை கர்னால், இந்தி சாலையில் உள்ள ஸ்ரீ ஆத்ம மனோகர் ஜெயின் ஆராதனா மந்திரில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி தொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். முன்னதாக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்த அவரை ஜெயின் துறவி ஸ்ரீ பியூஷ் முனி ஜி மகராஜ் வரவேற்றார். இதைத்தொடர்ந்து, டாக்டர் மோகன் பகவத், மருத்துவமனையை திறந்து வைத்ததுடன், மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிச் சென்று பல்வேறு சுகாதாரப் பணிகள் குறித்து விசாரித்தார்.

டாக்டர் மோகன் பகவத் ‘நாம் நமக்காக மட்டும் வாழ்பவர்கள் அல்ல’ என்றார் . மேலும் நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளில், அனைவரின் நலனும், அனைவரின் மகிழ்ச்சியும் இயல்பாகவே உள்ளது. ஒவ்வொரு சூழ்நிலையிலும், அறத்தை வாழ்வின் ஒரு அங்கமாகக் கருதுகிறோம். சமுதாயத்தை வலுப்படுத்துவதன் மூலமே நாட்டில் நல்லவைகளை நாம் காண முடியும். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், சமுதாயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here