உலகம் பாரதத்திற்காக தயாராகிவிட்டது

0
314

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “நீங்கள் அடிக்கடி செய்திகளில் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளார், ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்றெல்லாம் கேட்டிருப்பீர்கள். ஆனால் நான் அந்தப் பயணங்களில் என்ன செய்கிறேன்? என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு முக்கிய விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒன்று உலக நாடுகளுக்கு பாரதத்தை எடுத்துரைப்பது. இன்னொன்று உலகத்தை பாரதம் நோக்கி அழைத்து வருவது.இந்த உலகம் இன்றைய பாரதத்திற்காக தயாராகிவிட்டது. மத்திய அரசு வெளியுறவுக் கொள்கைகள் 10 நாட்களுக்கானது, 10 மாதங்களுக்கானது, 10 வருடங்களுக்கானது என பல்வேறு பார்வைகளையும் உள்ளடக்கிக் கட்டமைத்துள்ளது. மோடியின் வெளியுறவுக் கொள்கைகள் ‘பாதுகாப்பு, வளர்ச்சி, மக்கள் நலன்’ ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் உலகம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக மாறிவரும் அமெரிக்கா. எழுச்சி காணும் சீனா ஆகியவை இருக்கின்றன. வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டுக்கு வெளியே நடப்பது என்று கருதக்கூடாது. அது நம் அன்றாட வாழ்க்கையை சார்ந்தது. பாரதம் கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு ஆளாகியது. ஆனால் இப்போது அது தொடர்பான நமது பார்வை மாறியுள்ளது. உரி, புல்வாமாவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நமது மத்திய அரசு தனது கொள்கைகளில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை நாம் கண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here