இந்து முன்னணி பிரார்த்தனை போராட்டம்

0
466

தமிழக அரசு, திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது பக்தர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டாண்டு காலமாக தொடரும் ஹிந்துக்களின் இந்த நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், நேற்று இந்துமுன்னணி அமைப்பினர், பக்தர்களை அனுமதிக்க மறுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நல்ல புத்தி வழங்ககோரி, திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பஜனை பாடி ஊர்வலமாக சென்று திருச்செந்தூர் கோயிலில் முருக பெருமானிடம் பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசுராஜா உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here