வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஷிஷ் ஜா பேசுகையில், “பாரதம் தனது மிகச் சிறப்பான உற்பத்தி திறனால் தடுப்பூசிகளை அதிக அளவு ஏற்றுமதி செய்தது. உலக நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நாங்கள் மிக முக்கியமானதாக பார்க்கிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சியால் கோவாக்ஸ் திட்டம் மூலம் சுமார் 100 நாடுகள் வரை தடுப்பூசியை இலவசமாக பெற்றன. நாங்கள் தொடர்ந்து தடுப்பூசியை தானமாக அளித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.