மகாராஷ்டிர & குஜராத் மாநிலங்களில் ஹோலார் (திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் இசை மேள தாளம் இசைப்பவர்கள்) சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டம் கலகாவ் வாடி கிராமத்தில் பலவருடங்க ளாக ஹோலார் சமுதாயத்தினருக்கு அவ்வூர் ஆலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சங்கத்தின் சாமாஜிக சமரசதா (சமுதாய சமத்துவம்) கார்ய கர்த்தர்கள் அவ்வூர் பெரியோர்களின் ஒத்துழைப்புடன் ஹோலார் சமுதாயத் தினரை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பெரு மகிழ்ச்சி அடைந்தனர் ஹோலார் சமுதாயத்தினர்.