பெங்களூரு: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நம் ராணுவ வீரர்கள் மீது தொடுத்த தாக்குதலை கொண்டாடும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் பயஸ் ரஷீத் என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.