தஞ்சாவூர் இன்று காலை ராஜராஜன் சதய விழா மங்கல இசையுடன் இனிதே துவங்கியது. தருமபுரம் ஆதீனம் சுவாமிகள் திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார்.
பின்னர் ராஜராஜன் மீட்டெடுத்த தேவாரப் பாடல்கள் அடங்கிய சுவடிகளை யானை மீது ஏற்றிக் கொண்டு மங்கல வாத்தியங்கள் பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு சோழன் சிலை வந்தது.
பிறகு ராஜராஜ சோழன் சிலைக்கு சதய விழா குழுவினர் காவல் கண்காணிப்பாளர், அறங்காவலர் பாபாஜி ராஜா மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெருவுடையாருக்கும் பெரிய நாயகிக்கும் அபிஷேகமும் மகாதீபாரதனையும் காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. மாலை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இரவு ராஜராஜன், லோகமா தேவி சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு விதி உலா சென்று அதனுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.