1. தஞ்சைமாவட்டம் , கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் 08-11-1910-ல் பிறந்தார். இவர் ஒரு புகழ்ப்பெற்ற தவில் கலைஞர்.
2. இராகவப்பிள்ளை குழந்தையாக இருக்கும்போது, தொட்டிலை சுற்றி ஒரு நல்லபாம்பு இருப்பதை பார்த்த, அவரது தாயார் பெருமாள் திருநாமங்களைச் சொல்ல, பாம்பு மேல் கூரைவழியாக வெளியேறியது. இதனால் இவருக்கு இராகவன் என்று பெயர் சூட்டினார்.
3. தன் மகனுக்கு இயற்கையிலேயே நல்ல ஞானம் இருப்பதை அறிந்து அவருக்கு மிருதங்கம் பயில ஏற்பாடு செய்தார் தந்தை. இவருக்கோ தவில் கற்கத்தான் அதிகவிருப்பம். திருவாளப்புத்தூர் பசுபதியாபிள்ளையிடம் இரண்டுஆண்டுகளும், பின்பு நீடாமங்களம் என்.டி.மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் குருகுலமாக பதினொரு ஆண்டுகள் தவில் பயின்றார்.
4. இவரது தவில் வாசிப்புபற்றி சுதேசமித்திரன் நாளிதழ், இவர் நாதசுரத்திற்கு லாகவமாக வாசிப்பதால் இவர் தன்பெயரை”ஸ்ரீஇலாகவப் பிள்ளை” என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று பாராட்டி செய்தி வெளியிட்டது.
5. இலங்கை வல்வெட்டித் துறையில் அகில இந்திய தவில்சக்கரவர்த்தி என பட்டம் பெற்றார்.