நாகபுரி. நவம்பர், 14. நாகபுரியில் சங்க சிக்ஷா வர்க மூன்றாம் வருடம் நவம்பர் 14 அன்று துவங்கியது.
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் பயிற்சிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சங்க சிக்ஷா வர்க (மூன்றாம் ஆண்டு) நவம்பர் 14 2022 நாகபுரியில் ரெஷிம்பேகில் அமைந்துள்ள ஸ்ம்ருதி மந்திர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வருடம் மே மாதத்தில் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவிட் நோயின் காரணமாக கடந்த இரு வருடங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆனால் இந்த வருடம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் இரண்டாம் முறை பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
நவம்பர் 14 காலை நாகபுரியில் டாக்டர் ஹெட்கேவார் நினைவிடத்தில் உள்ள வியாஸ் மண்டபத்தில் நிகழ்ச்சி துவங்கியது.
நாடு முழுவதிலும் உள்ள எல்லா மாநிலங்களில் இருந்தும் சிக்ஷார்த்தி ஸ்வயம் சேகர்கள் பங்கு எடுத்துக் கொண்டனர். சுமார் எழுநூறு ஸ்வயம் சேவகர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.
சங்க சிக்ஷா வர்க (மூன்றாம் ஆண்டு) ஸர்வாதிகாரி மானிய தக்ஷிணாமூர்த்தி (மானனீய சங்க சாலக் தெலுங்கானா ப்ராந்தம்) அவர்களை நாகபுரி ரயில் நிலையத்தில் விதர்ப்ப பிராந்த ஸக கார்யவாஹ் ஸ்ரீ அதுல்ஜி மோகே, நாக்புரி மகாநகர் சங்கசாலக் மானனீய ராஜேஷ்ஜி லோயா ஆகியோர் வரவேற்றனர்.