1. பிர்சா முண்டா இவர் ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர்.
2. 1894 அக்டோபர் 1ஆம் தேதி பயிரிடும் உரிமைக்கான நிலுவை வரித்தொகையைத் தள்ளுபடி செய்யுமாறு போராடினார். இதுவே பழங்குடிகளுக்காக இந்தியாவில் நடந்த முதல் போராட்டம்.
3. பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும் தான் இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் உள்ளது.
4. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள விமான நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
5. சின்த்ரி என்ற இடத்தில் பிர்சா தொழில் நுட்ப மையம் ஒன்றும், பெருல்லா என்ற இடத்தில் சித்தா கன்கோ பிர்சா பல்கலைக்கழகம் மற்றும் ராஞ்சியில் பிர்சா முன்டா அத்லடிக் வளாகம் ஒன்றும் அவரின் நினைவாக அரசு நிறுவியுள்ளது.
6. பழங்குடிஇன மக்கள் இவரை மண்ணின் மைந்தன் (தர்த்தி அபா) என்று அழைக்கிறார்கள்.
7. 25 ஆண்டுகளாக இவர் செய்த போராட்டங்களை மக்கள் இன்றும் நினைவுகூருகிறார்கள். இவர் ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்று அறைகூவல் விடுத்துப் போராடினார்.