ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி. திட்டம் தீட்டுவதில் வல்லவர். வலிமையும், வீரமும், துணிச்சலும் மிகுந்தவர்.
கட்டபொம்மன் தமது அனைத்து செயல்பாடுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும், இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இவரும் கட்டபொம்மனுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்தும், அவருக்குப் பாதுகாவல் அரணுமாக செயல்பட்டார்.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்ததால் பாளையங்கோட்டைச்சிறையில் அடைக்கப்பட்டார். 1801-ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பி, போரில் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார்.
பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசால் கட்டபொம்மனும் அவருக்கு உதவிய பாளையக்காரர்களும் 16-10-1799 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரை பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
16-11-1801ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்டார்.
எதையும் எதிர்பாராமல், தன்னலம் கருதாது நாட்டிற்காக உழைத்தவர். அவரது தியாகம் இம்மண்ணுள்ளவரை போற்றப்படும்!