பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது

0
192

பழங்குடியினர் கௌரவ தினமான நேற்று அத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15ம் தேதி பழங்குடியினர் கௌரவ தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, பாரதத்தின் புகழ்பெற்ற பழங்குடியின மரபு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அடையாளப்படுத்தும் முடிவாகும். இது ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒரு வரலாற்றுத் தருணமாகும்.

‘தேச விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலகட்டத்தில், பாரதத்தின் பழங்குடியின மரபுகள் மற்றும் அவர்களின் வீர தீர செயல்களுக்கு குறிப்பிடத்தக்க, கம்பீரமான அடையாளத்தை வழங்க தேசம் தீர்மானித்துள்ளது’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். உலகின் 25 சதவீத பழங்குயின இன மக்களுக்கு பாரதம் இருப்பிடமாக உள்ளது. இதன் மூலம் நம் தேசம், பன்முகத்தன்மை வாய்ந்த, மிகச்சிறந்த கலாச்சார பாரம்பரியம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பழங்குடி மக்களை உள்ளடக்கியதாக உள்ளது. கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் பழங்குடியின மக்கள் தங்களுக்கான வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துகின்றனர். அர்ப்பணிப்பு, விடா முயற்சி மூலம் பத்ம விருதுகள் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை வெல்கின்றனர்.

பழங்குடியினர் பல இயற்கையாக திறமைகளை பெற்றிருந்தாலும், அவர்கள் மீதான புறக்கணிப்பு, அலட்சியம் காரணமாக, தங்களது உரிமைக்கு அவர்கள் நீண்ட காலமாக போராட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நமது பிரதமரின் தலைமையில் அனைத்தும் மாறிவிட்டன. பாரதத்தின் குடியரசுத் தலைவர் பதவிக்கு முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டது, நம் தேசத்தின் பழங்குடியினரின் ஆற்றல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு” என கூறியுள்ள அவர், பெண்களுக்கான கல்வி, மாணவர்களுக்கு தரமான கல்வி, பழங்குடியின மக்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள், தொழில்கள், வளர்ச்சி திட்டங்கள், உற்பத்தி பொருட்களை விற்க ஏற்பாடுகள், வாழ்கை முன்னேற்றம், பழங்குடி மக்களின் பல்வேறு இன கலாச்சாரங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here