கேரள ஆலூவாவில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் கல்லூரியின் 70ம் ஆண்டு விழாவை முன்னிட்டு எற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில், திருக்குறள், பகவத் கீதை உட்பட பல ஹிந்து ஆன்மீக நூல்கள் ஒரு நாற்காலியின் கீழ் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மீது இந்திய அரசியல் சட்டம் மற்றும் மகாத்மா காந்தியின் சுயசரிதை உள்ளிட்ட நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு அம்மாநிலத்தில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. கம்யூனிச கிறிஸ்துவக் கூட்டணியின் ஹிந்து விரோத மனப்பான்மைக்கு இது மேலும் ஒரு உதாரணம் என மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.