1. திருமலை கிருஷ்ணமாச்சாரியார் நவம்பர் 18, 1888 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டத்தில் முச்சுகுண்டபுரம் என்ற இடத்தில் பிறந்தார்.
2. இந்தியாவின் தலைசிறந்த யோகா குரு. ஆயுர்வேத பண்டிதர்.
3. 6 வயதில் சமஸ்கிருதத்தில் பேசவும், எழுதவும் தொடங்கினார்.
4. இந்தியா முழுவதும் பயணம் செய்து, வாரணாசி பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களில் வயசேசிகா, நியாயா, சங்க்யா, யோகா, மீமாம்சா மற்றும் வேதாந்தா என்கிற வேத தத்துவப் பாடங்களில் பட்டம் பெற்றார்.
5. ஊட்டச்சத்து, மூலிகை மருத்துவம் மற்றும் குணப்படுத்தும் முறைகள் குறித்து ஆழமான அறிவைப் பெற்றிருந்தார்.
6. மைசூர் மகாராஜாவின் உதவியுடன் யோகசாலா என்ற யோகா அமைப்பை 1933-ல் தொடங்கினார். யோகப் பயிற்சி, ஆயுர்வேதம் மூலமாக நோய்களை குணப்படுத்தினார்.