பயங்கரவாத ஆதரவாளர் வீட்டில் சோதனை

0
245

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் மிர் அனாஸ் அலி. இவர், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கடந்த ஜூலையில் மிர் அனாஸ் அலியின் வீட்டினுள் அதிரடியாக நுழைந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த அலைபேசி, கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவரிடம் காவல் நிலையத்தில் வைத்து சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பயங்கரவாத இயக்கத்துடன் டெலிகிராம் செயலி வழியாக தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு மிர் அனாஸ் அலி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஆம்பூரில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையையடுத்து அவரது வீட்டின் அருகில் ஏராளமானவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here