மாவீரன்வெள்ளையப்பன்

0
122

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் மாவீரன் வெள்ளையப்பன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா துரைச்சாமியாபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.

ஒரு சமயம் அவரது இளைய அண்ணன் திடீரென்று இறந்துவிட அவரது அண்ணி அவர்கள் விதவை கோலத்தில் நின்ற காட்சி வெள்ளையப்பனின் மனதை உருக்கியது. அவரது பேச்சு நின்றுபோனது பல மாதங்களுக்கு அவரால் வாய் திறந்து பேச முடியவில்லை. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் பேச்சு வரவில்லை.

அந்நேரத்தில் அவரது பக்கத்து ஊரில் RSS அமைப்பில் தினசரி ஷாகா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த ஷாகா வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தினசரி ஷாகாவிற்கு சென்று வந்து அங்கே RSS பொறுப்பாளர்கள் பயிற்சி மூலமாக வெள்ளையப்பனுக்கு திரும்பவும் பேச்சு வந்தது. இதனால் அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீதும், இந்து சமுதாயத்தின் மீதும் பற்று அதிகம் ஆனது.

வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை வந்து தாம்பரத்தில் ஒரு தள்ளு வண்டியில் பழக்கடை நடத்தி வந்தார். தாம்பரத்தில் தாம்பரம் அம்மா என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அம்மா ரக்ஷா பந்தன் அன்று எல்லோருக்கும் ராக்கி கட்டி கொண்டு இருக்கும் போது ராக்கி எனக்கும் கட்டுங்கள் என்று தானாக சென்று அறிமுகமாகிறார். அம்மா மூலமாக திரும்பவும் சங்கத்திற்கு அறிமுகமாகிறார்

அப்போது விநாயகர் சதுர்த்தி நேரத்தில் தாம்பரம் ஜோதி நகரில் முதல் முதலாக விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் திருமேனி வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துகிறார். அன்று முதல் இந்துமுன்னணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அந்தப் பகுதியில் இந்து முன்னணி பொறுப்பாளராக இந்து சமுதாய பணியைத் தொடர்ந்தார். பின்பு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி வளர்ச்சிக்காக வேலூர் கோட்ட பொறுப்பாளராக வெள்ளையப்பன் அறிவிக்கப்பட்டு, அன்றிலிருந்தே வேலூரின் மகனாக வெள்ளையப்பன் தனது இயக்க பணியை தொடர்ந்தார்.

திருச்சியில் பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி கட்டிட வேலைக்காக. அப்போதைய வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பெரியோர்களை சந்தித்து கட்டிட நிதிக்காக நிதி திரட்டி வீரத்துறவி இராமகோபாலன் அவர்களிடம் ஒப்படைக்கிறார். ஒருசமயம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகில் உள்ள பத்தியாவரம் கிராமத்தில் வெள்ளைக்காரன் காலத்திலேயே கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்ட தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்.அங்கிருக்கும் பாதிரியார்களால் மிகக் கீழ்த்தரமாக நடத்துவதாக கூறி மிகப்பெரிய பிரச்சினை எழுந்தது. அப்போது அங்கிருந்த தலித் சமுதாய மக்கள் நாங்கள் திரும்பவும் இந்து மதத்தில் சேர விரும்புகிறோம் என்று சொன்னபோது அங்கு சென்ற வெள்ளையப்பன் அந்த மக்களை நேரடியாக சந்தித்து அந்த மக்களிடம் பேசி அங்கு வீரத்துறவி ராமகோபாலன் அவர்களை வரவழைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை தாய் மதத்துக்கு திரும்ப வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் பல கிறிஸ்துவ மத மாற்றத்தையும் மிகப்பெரிய பிரச்சாரத்தையும் தடுத்தவர் வெள்ளையப்பன் அவர்கள். வேலூர் கோட்டை மைதானத்தில் கிருத்துவ மத பிரச்சாரகன் பால் தினகரனின் மதமாற்ற பிரச்சார கூட்டத்தை தடுத்து நிறுத்தினார். வெள்ளைப்பன் அவர்கள் எல்லோரிடத்தும் மிக அன்பாக பழகுபவர் டீக்கடைகாரர்களிடம் இருந்து பெரிய ஹோட்டல் அதிபர் வரையிலும். ஆட்டோ ஓட்டுனரிலிருந்து பஸ் லாரி அதிபர்கள் வரையிலும்.பெரிய தொழிற்சாலை அதிபர்கள் பல்கலைக்கழக வேந்தர்கள் அனைவரிடத்திலும் அறிமுகமாகி மிக நெருங்கிப் பழகி அவர்களின் அன்பைப் பெற்ற வல்லமை படைத்தவர் வெள்ளையப்பன்.

2013 வருடம் ஜூலை 1ஆம் தேதி மதியம் 12 மணிக்கு கூட்டு வழிபாடும் இரண்டாம் தேதி மாநகர் முழுவதும் இந்து அறநிலையத் துறையை கண்டித்து கடையடைப்பு போராட்டமும் நடத்துவதாக அறிவித்தார். திட்டமிட்டபடி ஜூலை 1ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டு வழிபாடு ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது கூட்டு வழிபாடு இரண்டு மணிக்கு நிறைவு பெற்று அங்கேயே பிரசாத உணவு உண்ட பிறகு சிறிது நேரம் கோவிலில் அலுவலகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டே கண் அயர்ந்தார்.

பின்பு சரியாக 3 மணிக்கு அவர் மறுநாள் போராட்டத்திற்கு தயார் செய்வதற்காக வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பின்னாலுள்ள அவர் தங்கியிருந்த ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார் அங்கு செல்கின்ற வழியில் முஸ்லிம் பயங்கரவாதிகள் மறைந்து இருந்து அவர் மீது தாக்குதல் நடத்தி வெள்ளையப்பன் அவர்களை படுகொலை செய்தார்கள். நிற்காமல் கடிகார முள் போல் இந்து சமுதாயத்திற்காக வேலூர் மாவட்டம் முழுவதும் சுற்றி வந்த வெள்ளையப்பனை படுகொலை செய்தனர் முஸ்லிம் பயங்கரவாதிகள்.

வெள்ளையப்பன் இழப்பு வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. வேலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தானாக வந்து இந்த படுகொலையை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளையப்பன் பூதவுடலை காண அலைகடலென வேலூர் தோட்டப்பாளையத்தில் குவிந்தனர். வெள்ளையப்பன் படுகொலை வேலூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மிகப்பெரிய இந்து எழுச்சியை உருவாக்கியது. ஹிந்துக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். வெள்ளையப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த வேலூரைச் சேர்ந்த பெரியவர்கள் வெள்ளையப்பன் பூத உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டாம் உறவினர்களை இங்கே வரச் சொல்லுங்கள் அவர் வேலூரின் மைந்தன். அவரது பூத உடலுக்கு இறுதி சடங்குகளை வேலூரிலியே செய்வோம். இங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்கள் உடன் பேசினார்கள். இது வெள்ளையப்பன் மீது வேலூர் மக்கள் வைத்த பாசத்தை காட்டுகிறது.

வெள்ளையப்பனை கொன்றால் இந்துமுன்னணியின் வளர்ச்சி நின்றுவிடும் அதோடு இந்து சமுதாயத்திற்காக வேலை செய்ய யாரும் வரமாட்டார்கள் என்ற முஸ்லிம் பயங்கரவாதிகளின் எண்ணம் தவிடுபொடியானது . வெள்ளையப்பனால் உருவாக்கப்பட்ட இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் முன்பை விட வேகமாக வெள்ளையப்பனின் கனவை நிறைவேற்ற உறுதி பூண்டு இன்று வேலூர் கோட்டம் முழுவதும் இந்து முன்னணி கோட்டையாக மாற்ற வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். வெள்ளைப்பனின் ஒவ்வொரு துளி ரத்தமும் நூற்றுக்கணக்கான வெள்ளையப்பன்களை உருவாக்கி கொண்டிருக்கிறது.

#வேலூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here