பயங்கரவாதிகளிடம் பாகுபாடு கூடாது – இந்தியா வலியுறுத்தல்.

0
219

‘பயங்கரவாதிகளில் பாகுபாடு பார்க்கக் கூடாது,” என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


ஐ.நா.,பொதுச் சபையில், சர்வதேச பயங்கரவாத தடுப்பு திட்டத்தின் 7வது சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: உலகளவில், பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த, 2001ல் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நிகழ்வுக்குப் பின், சர்வதேச சமூகத்திற்கு பயங்கரவாதத்தின் தாக்கம் புரிந்துள்ளது. அதற்கு முன், ‘உங்கள் நாட்டு பயங்கரவாதிகள் அல்லது எங்கள் நாட்டு பயங்கரவாதிகள்’ என, பிரித்து பார்க்கும் சூழல் தான் இருந்தது. இப்போது அதுபோன்ற நிலை, மீண்டும் தலைகாட்டுகிறது. சமூக ஊடகங்களில் பயங்கரவாத பிரசாரம் மேற்கொள்ளப் படுகிறது; வகுப்புவாத அமைப்புகளில் ஆட்சேர்க்கை நடக்கிறது.

‘பிளாக்செயின்’ போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம் செய்கின்றனர். ‘ட்ரோன், ரோபோ’ போன்ற தொழில்நுட்பங்கள் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், உறுப்பு நாடுகள், புதிய வடிவம் எடுத்துள்ள பயங்கரவாதத்தை ஒடுக்க ஒற்றுமையாக செயல்படுவது அவசியம். பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளிடம் பாகுபாடு பார்க்கக் கூடாது. உலகின் ஒரு பகுதியில் நடக்கும் பயங்கரவாதம், நேரடியாக மறுபகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஐ.நா.,பொதுச் சபை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். என அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here