சத்ரபதி சிவாஜி இல்லையென்றால் பாரத நாட்டின் நிலை கேள்வி குறி தான் – பிரதமர் மோடி.

0
582

பழம்பெரும் எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான பாபாசாகிப் புரந்தரே கடந்த 29-ந் தேதி 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த விழாவில் பிரதமர் மோடி பேசி பதிவு செய்யப்பட்ட வீடியோ போடப்பட்டது.


இதில் பாரத பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்திய வரலாற்றில் சத்ரபதி சிவாஜி மன்னர் மிக உயர்ந்த மனிதர். ஒருவேளை சத்ரபதி சிவாஜி மன்னர் இல்லையென்றால் நமது கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் பற்றி கேள்வி எழும். சத்ரபதி சிவாஜி இல்லாமல் தற்போது இந்தியாவின் நிலையை நினைத்து பார்ப்பது கடினம். நல்ல அரசுக்கு அவரது ஆட்சி மிகச்சிறந்த உதாரணம்.

பாபாசாகிப் புரந்தரே சிவாஜி மன்னரின் வீர, தீர வரலாற்றை இளம் தலைமுறையினர் இடையே கொண்டு சென்று உள்ளார். சிவாஜி மன்னர் மீதான அவரது நம்பிக்கை அவரது எழுத்துகளில் பிரதிபலிக்கும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here