பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரும் 26-ம் தேதி விண்வெளிக்கு பிஎஸ்எல்வி-54 ராக்கெட் மூலம் 8 நானோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இஸ்ரோ தற்போது விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ தலைமையகம் வெளியிட்ட அறிக்கை.
வரும் சனிக்கிழமை (நவ.26) காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி-54 ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ராக்கெட் மூலம் ஓசியான்சாட்-3 மற்றும் எட்டு நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. பூட்டான்சாட், பிக்ஸலின் ஆனந்த், துருவா ஸ்பேஸின் இரண்டு தைபோல்ட், யுஎஸ்ஏ ஸ்பேஸ்ப்ளைட்டின் நான்கு ஆஸ்ட் ரோகாஸ்ட் செயற்கைக்கோள்கள் ஆகியவையே அந்த எட்டு நானோ செயற்கைக்கோள்களாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.