பொதுமக்கள் பார்வையிட அனுமதி

0
111

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல். வி சி 54 ராக்கெட் நவம்பர் 26ம் தேதி காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில், புவி ஆய்வுக்கான இஓஎஸ்06 (ஒசோன்சாட்03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ள செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், துருவா ஸ்பேஸ்
நிறுவனத்தின் தைபோல்ட், பூட்டான் சாட், பிக்சலின் ஆனந்த் உள்ளிட்ட 8 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட உள்ளன. ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிகட்ட கவுன்ட்டவுன் நவம்பர் 25ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை நேரில் காண விருப்பமுள்ளவர்களும் கூடுதல் விவரங்களை அறியவும் https://Ivg.shar.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here