ராணுவத்திற்கான மின்சார வாகனம்

0
216

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரை தளமாக கொண்ட ‘ப்ரவைக் டைனமிக்ஸ்’ எனும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம், இந்திய ராணுவத்திற்கான தனது புதிய ‘ஹை மொபிலிட்டி மல்டி பர்பஸ்’ மின்சார வாகனம் ஒன்றை சமீபத்தில் அறிமுகபடுத்தியுள்ளது. இந்த வாகனத்திற்கு ‘வீர்’ என பெயரிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தயாரித்த ‘டிஃபை’ எனும் எஸ். யு.வி ரக வாகனத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய மின்சார வாகனம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீர் வாகனத்தில் ஒரு 90.2 கி.வா திறன் பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. இது நான்கு சக்கரங்களுக்கும் 402 பி.ஹெச்.பி குதிரைசக்தி மற்றும் 620 என்.எம் திறனை அளிக்கும். ராணுவ பயன்பாட்டுக்குஉகந்தவகையில்தரைக்கும் வாகனத்திற்குமான இடைவெளி 234 மில்லிமீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் உள்ள வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் காரணமாக வெறும் 30 நிமிடத்தில் சுமார் 80 சதவிகிதம் அளவுக்கு சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் தொடர்ந்து செல்லும். இந்த வாகனம் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்திய தரைப்படையின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here