உத்தராகண்டில் சீனாவுடனான எல்லைக்கு அருகில் இந்தியா அமெரிக்க ராணுவப் பயிற்சியான ‘யுத் அபயாஸ்’ தற்போது நடந்து வருகிறது. இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையில் சிறந்த நடைமுறைகள், செயல்பாடுகள், வியூகங்கள், நுட்பங்களை பரிமாறிக் கொள்வதற்காக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஆண்டுதோறும் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. 221ல் இந்த பயிற்சி அலாஸ்காவின் கூட்டுத் தளமான எல்மெண்டோர்ஃப் ரிச்சர்ட்சனில் நடத்தப்பட்டது. ஐ.நா ஆணையத்தின் 7வது அத்தியாயத்தின் கீழ் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. இரு தரப்பில் இருந்தும் சுமார் 350 வீரர்களுடன், இந்த யுத் அபியாஸ் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். மலைகள் மற்றும் கடுமையான குளிர் காலநிலையில் ஒருங்கிணைந்த போர்க் குழுக்களின் திறமையை அவர்கள் இதில் வெளிப்படுத்துகின்றனர். இரு தரப்பில் இருந்தும் சுமார் 350 வீரர்களுடன், இந்த யுத் அபியாஸ் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். மலைகள் மற்றும் கடுமையான குளிர் காலநிலையில் ஒருங்கிணைந்த போர்க் குழுத் திறமையை அவர்கள் இதில் வெளிப்படுத்துகின்றனர். முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீனா இந்த பயிற்சிக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்த்து. இது, இருதரப்பு எல்லைப் பிரச்சினையில் குறுக்கீடு செய்வதாகும். இந்திய சீன ஒப்பந்தங்களை மீறுவதாகும், எல்லைக்கருகில் ராணுவ ஒத்திகை நடத்தப்படக்கூடாது என்று கூறியது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “மூன்றாம் தரப்பினரின் இந்த குறுக்கீடு பற்றி எனக்குப் புரியவில்லை. இந்தியா அமெரிக்கா இடையேயான இந்த பயிற்சி முற்றிலும் வேறுபட்டது, அதற்கு அவர்கள் என்ன சாயம் பூசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என தெரிவித்தார்.