பெங்களூரு வி.வி புரம் பகுதியில் புகழ்பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் சம்பா ஷஷ்டியை முன்னிட்டு ஆண்டுதோறும் தேரோட்டம் நடப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நடைபெற்றது. ஹிந்து கோயிலின் தேரோட்டத்தின்போது ஹிந்து வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது, மீறினால் போராட்டம் நடத்தப்படும் என்று ஹிந்து அமைப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால், கோயில் நிர்வாகம், முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது. கோயில் நிர்வாகம், முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க அனுமதி அளித்ததை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற ஹிந்து அமைப்பினரை அனுமந்தநகர் காவல்துறையினர் கைது செய்தனர். தேரோட்டம் நடைபெற்ற வீதிகளில் வியாபாரம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. பிற பகுதியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என கூறப்படுகிறது.