1. விடுதலைப் போராட்ட வீராங்கனை, பிரபல நாவலாசிரியை – வை.மு.கோதைநாயகி பிறந்த தினம் இன்று..(01.12.1901)
2. இவர் சிறுவயதிலேயே தாயை இழந்தார். நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைக் கற்று, குழந்தைகளும் பெரியவர்களும் ரசிக்கும் வகையில் கதைசொல்லும் திறன் பெற்றிருந்தார்.
3. இதைக் கண்ட கணவர், மனைவியின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அவற்றைப் பார்த்து, இவர் எழுதிய முதல் நாடக நூல் ‘இந்திர மோகனா’, 1924-ல் வெளிவந்தது.
4. பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, விதவைத் திருமணம் ஆகியவற்றைத் தன் நாவல்கள் மூலம் வலியுறுத்தினார்.
5. அணிகலன்களைத் துறந்து கதராடை மட்டுமே அணிந்தார். மது ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
6. ‘மகாத்மாஜி சேவா சங்கம்’ தொடங்கி ஏழைகள், ஆதரவற்ற
குழந்தைகள், பெண்களுக்கு உதவிகளைச் செய்தார். துப்பறியும் நாவல்கள் உட்பட மொத்தம் 115 நாவல்களை எழுதியுள்ளார். தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் இவர்தான்.
7. 115 புதினங்களை எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.